வடக்கின் பெரும்போர் 5ம் திகதி ஆரம்பம்!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

central-st.johns-bigmatch

109 ஆவது தடவையாக நடக்கும் இந்தப் போட்டிக்கு ‘எயார்ரெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. மைதானத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர். இதுவரை நடந்து முடிந்த 108 போட்டிகளிலும் சென்.ஜோன்ஸ் கல்லூரி 33 போட்டிகளிலும், யாழ். மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும், 39 போட்டிகள் சமநிலையிலும் முடிந்துள்ளன.7 போட்டிகளின் முடிவு அறிவிக்கப்படவில்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

Related Posts