இலங்கையில் தொன்மை வாய்ந்த பாடசாலை மட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ‘வடக்கின் பெருஞ்சமர்’ யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(13-03-2014) ஆரம்பமாகவுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக சமநிலையில் முடிவடைந்த இந்தப் போட்டி, இம்முறை விறுவிறுப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 3 நாட்களைக் கொண்ட இந்தப் போட்டி 108 ஆவது தடவையாக இந்த முறை நடைபெறவுள்ளது.
யாழ். மத்திய கல்லூரி அணியை இம்முறை கே.ஜுனிஸ் கனிஸ்டன் வழிநடத்துகிறார்.
யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக சதமடித்த வீரரான எஸ்.சௌமிதரன் உபதலைவராக செயற்படுகிறார்.
பி. நிரூபன், வி.டினோஜன், கே.சரிசயன், எஃப்.ஜெயேந்திரன், எஸ்.அலன்ராஜ், டி. தனுஷன் ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தவுள்ளனர்.
எஸ். மதுஷன், கே.ரசிரூபன், ஆர்.பிரியந்தன், ஏ.டேவிட் ஆகியோர் அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர்கள்.
சென். ஜோன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பு பரமானந்தம் துவாரகசீலனுக்குக் கிடைத்துள்ளது.
அணியின் உபதலைவராக ஆப்ராம் அனோஜன் செயற்படுகிறார்.
சஜீந்திரன் கபில்ராஜ், ரவீந்திரன் லொத்திஸ்வர், அருளானந்தம் ஜனாமிர்தன் மஹாலிங்கம் நிலோஜன், ராஜாஸ்பிரியா பிரியசங்கர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ள துடுப்பாட்ட வீரர்களாவர்.
ஜெனி பிலெமின், வசந்தன் ஜதுஷன், ஷாந்தகுமார் பிரவீன்ஷான், மணிவண்ணன் சிந்துஜன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்கள்.