வடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு!

வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts