வடக்கின் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த மாதம் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டது. இப்பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருந்த நிலையிலேயே, நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50,000 செங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

 

வரவு செலவு திட்டம் முழுமையாக பார்வையிட

Related Posts