வடக்கின் தேவை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு! முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பங்கேற்பார்!!

வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், இதில் வடக்கின் தேவைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் தான் பங்குபற்றவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts