வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பம்!

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார்.500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது.

northern-express-way-road-

‘சிலுமினி தொரட்டுவ’ எனப்படும் வடக்கு அதிவேக பாதைக்கான அடிக்கல்லும் இன்றைய தினமே மாலை 2.30 மணிக்கு கலேவெல பிரதேசத்தில் ஜனாதிபதியினால் நட்டு வைக்கப்படும் அதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதன் தொடர்ச்சியாக கட்டுவனவில் அடிக்கல் நடப்படும்.

அன்றைய தினமே மாளிகாபிட்டியவில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான அடிக்கல் ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும்.

உள்ளூர் ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் முதலாவது அதிவேகப் பாதை இதுவாகும். முழுத் தூரத்தில் 60 வீதத்தை உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நிர்மாணிப்பர். நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்

பாதை நிர்மாணிப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேறப் பிரார்த்தித்து கண்டியில் பல்வேறு சமய கலாசார நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும்- தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

Related Posts