வசாவிளான் மகா வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடம் ஆரம்பிப்பு

vasavilaan-openingமஹிந்த சிந்தனையின் கல்வி விரிவாக்கற் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடவிதானம் வட மாகாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.வசாவிளான் மகா வித்தியாலயத்தில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக வட மாகாணத்திலிருந்து 39 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இந்த பாடம் யாழ்.வசாவிளான் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாயர் சத்தியசீலன், கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பாடசாலைகளின் பணிப்பாளர் முரளிதரன், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் இராதா கிருஷ்ணன், 515 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சிசாந்த மனப்பே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் வடாமகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் உரையாற்றும் போது.


62 தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்க நடவடிக்கை

நாட்டில் கன்னங்கர அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வியின் மூலம் பல இலட்சக் கணக்கான மாணவர்கள் நன்மையடைந்துள்ளனர். இந்த இலசவக் கல்வி முறையினால் இன்றும் பல மாணவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய நாடாளாவிய ரீதியில் அரசாங்கம் 1000 இடைநிலைப் பாடசாலைகளையும் 5000 ஆயிரம் ஆரம்ப நிலைப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதில் ஆயிரம் பாடசாலை ஆபிவிருத்தி திட்டத்தில் வடமாகாணத்தில் 91 பாடசாலைகளும், 5ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 374 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மகிந்தோதையத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் இவ்வருடம் 62 தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 28 தொழில்நுட்ப ஆய்வுகூடங்களும் 17 ஆய்வு கூடங்களும் அமைப்பதற்கு கடந்த வாரம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts