வசனகர்த்தாவாக அவதாரமெடுக்கப் போகும் நடிகர் மாதவன்

தான் நடிக்க உள்ள புதிய படத்தின் ஹிந்திப் பதிப்பிற்கு நடிகர் மாதவன் வசனம் எழுத உள்ளார்.

இறுதிச் சுற்று படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சுற்றுக்கு கிளம்பியுள்ளார் நடிகர் மாதவன். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ’விக்ரம்-வேதா’ என்ற படத்தில் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ போலிஸ்காரராக மாதவன் நடித்து வருகிறார்.

விக்ரம்-வேதா படத்தை தொடர்ந்து இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கிராமப்புற கதையம்சம் கொண்ட படத்தில் மாதவன் நடிக்க உள்ளார். இந்த படமானது தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட உள்ளது.தமிழ் பதிப்பிற்கான வசனங்களை சற்குணம் எழுத,ஹிந்தி பதிப்பிற்காக வசனங்களை நடிகர் மாதவன் எழுத உள்ளாராம்.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’நளதமயந்தி’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு நடிகர் மாதவன் தான் வசனங்களை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வசனகர்த்தாவாக அவதாரம் எடுக்க இருக்கிறார் மாதவன்.

சற்குணம் இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts