வங்கித்துறை சேவையாளர்கள் பணிநிறுத்தப் போராட்டம்

வங்கித்துறையில ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாதீட்டில் தீர்வு கிடைக்காமை மற்றும் வங்கித்துறைக்கு ஒவ்வாத அழுத்தங்கள் தொடர்பாகவும் இன்று நாடளாவிய ரீதியாக பணிநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

குறித்த பணிநிறுத்தப் போராட்டத்தில் 8 அரச வங்கிகள் மற்றும் 12 தனியார் வங்கிகளின் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் கேஷர கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

எனினும், வங்கி நிறைவேற்று அதிகாரிகளின் சங்கம், தேசிய சேவையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை சுதந்திர சேவையாளர்கள் சங்கம் ஆகியன இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

அதேவேளை. இன்று போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் செல்லும் வங்கி ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Posts