வங்கிகள் மீண்டும் பழைய இடத்துக்கு வரவேண்டும்

வலிகாமம் வடக்கில் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னைய காலங்களில் இயங்கிய வங்கிகள் மீண்டும் அந்த இடங்களில் இயங்கவேண்டும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,

இடப்பெயர்வுக்கு முன்னர் காங்கேசன்துறையில் இயங்கிய மக்கள் வங்கியின் கிளை தற்போது, யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் இயங்கி வருகின்றது. அதேபோல், காங்கேசன்துறையில் இயங்கிய இலங்கை வங்கியின் கிளை தற்போது மல்லாகத்தில் இயங்கி வருகின்றது.

மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும் அரச கொடுப்பனவுகள் இந்த வங்கிகள் ஊடாக கொடுக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் அந்தந்த இடங்களில் இயங்காமையால் அந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றார்.

Related Posts