வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
10 வருடங்களுக்கு அதிக காலம் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் இந்த சட்டத்தின்படி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.