வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை

வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை அவதான நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தம் எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பொழியும் என்றும் அவர் தெரிவித்தார்

Related Posts