வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்கம் வலுவடைந்துள்ளது

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது.

இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின் வட பகுதியில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று சற்றுப் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

வங்காளவிரிகுடாக் கடல் பிராந்தியத்தில் காணப்படும் இந்த தாழமுக்க நிலை காரணமாக இலங்கைத்தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் கடும் காற்றுடன் மழை காணப்படும்.

[otw_shortcode_quote border_style=”bordered” background_color_class=”otw-silver-background”]மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடான மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழையுடன் காற்றும் பலமானதாக வீசும். கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40கிலோமீற்றர் முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும். இந்தக் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[/otw_shortcode_quote]

இலங்கைத் திவைச் சுற்றியுள்ள கடலானது கொந்தளிப்பாகக் காணப்படுவதனால், (முக்கியமாக மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள்) மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின்போது மிகமிக அவதானமாகச் செயற்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts