வகுப்பறைக்குள் நுழைந்த அதிபரைத் தாக்கிய ஆசிரியர்

வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே, அவ்வாறு அதிபர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்காள அதிபர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் எந்த காரணத்துக்காக அதிபரைத் தாக்கினர் என்பது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts