லோர்ட்சில் இடம்பெறும் ​​நட்சத்திர கண்காட்சி கிரிக்கெட் போட்டி

MCC – Marylebone Cricket Club​ என்ற கிரிக்கெட்டின் மிகப்பழமையான இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவை சிறப்பிக்குமுகமாக எதிர்வரும் 5ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் ​​நட்சத்திர கண்காட்சி கிரிக்கெட் போட்டி உலகின் முன்னாள், இந்நாள் சர்வதேச நட்சத்திரங்களை இரு அணிகளாகப் போட்டியிட்டுப் பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

sachin_worne

MCC​ அணியின் தலைவராக இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கௌரவ நியமனம் பெற்றுள்ளார்.
மறுபக்கம், Rest of the World​ அணியின் தலைவராக அவுஸ்திரேலிய சுழல்பந்து மன்னன் ஷேன் வோர்ன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் உலக சாதனை நட்சத்திரம் முரளிதரன் ஷேன் வோர்னின் அணியில் இடம்பெற்றுளார்.

முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் உலக சாதனையாளர் பிரையன் லாரா, இந்தியாவின் ராகுல் டிராவிட், அடம் கில்க்ரிஸ்ட், ப்ரெட் லீ, சந்தர்போல், கெவின் பீட்டர்சன், சயீட் அஜ்மல், சேவாக், அஃப்ரிடி போன்றோரும் விளையாடவுள்ளனர்.

Bot9ysqIAAAqCqb.jpg large

கண்காட்சிப் போட்டி தானே என்று கணக்கெடுக்காமல் விடாமல், இப்பொழுதே பயிற்சிகளில் இறங்கியுள்ளார்கள் நட்சத்திரங்கள்.

இந்த 50 ஓவர்கள் கொண்ட கண்காட்சிப் போட்டியின் டிக்கெட்டுக்கள் அத்தனையும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

சில செய்ம்மதித் தொலைக்காட்சிகளும் நேரலையாக இந்தப் போட்டியைக் காண்பிக்கவுள்ளன

Related Posts