லொறி சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை!!

கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்டனை சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஒழுக்கமான பொலிஸ் படையை உருவாக்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இத்தகையதொரு சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts