“லூசி” தி ஆஸ்திரிலோபிதிகஸ் எலும்புகள் கிடைத்த 41வது வருடம் இது

நமது முன்னோர்கெல்லாம் முன்னோரான “லூசி” என்னும் உயிரினத் தோன்றலின் உடற்கூறுகள் கண்டறியப்பட்ட 41 வது வருடத்தினை டூடுள் போட்டு கொண்டாடி வருகின்றது கூகுள்.

lucy-2

கிட்டதட்ட பாதி குரங்கும், பாதி மனிதனுமான இந்த பாட்டிதான் நம்முடைய மூதாதயை. கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்ட இந்த எலும்புப் படிமங்கள்தான் மனிதர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு விஞ்ஞானிகளுக்கு பதிலளிப்பதாக அமைந்தது.

ஹோமோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஹோமோசேபியன்ஸ் எனும் நாகரிக மனிதர்களான நாம். நமக்கு மூதாதை ஹோமோ எரெக்டஸ்.

lucy-1

இத்தனை தொன்மையான ஹோமோ குடும்ப வகை மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்த ஆஸ்திரிலொபிதிகஸ் வகை மனித இனம்தான் லூசியின் இனம்.

அவை இறைச்சி உண்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. லூசியின் உணவாக பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறும் உணவு, செட் தோசையும், கெட்டிச் சட்டினியும் அல்லபழங்கள், விதைகள், பூச்சிகள் மற்றும் சிறு மிருகங்களையே. அந்தக் காலகட்ட மனிதன் அப்போது மான், யானை போன்ற பெரிய மிருகங்களை வேட்டையாட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே இறைச்சி அவர்கள் உணவில் இருந்திருக்கிறது.

கிட்டதட்ட 3.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வசித்து வந்த இந்த அப்ரன்சிஸ் தொல்படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் “லூசி இன் தி ஸ்கை வித் டயமண்ட்” என்ற பாடலில் இருந்து லூசி என்ற பெயர் சூட்டப்பட்டது.

சிம்பன்சி எனப்படும் குரங்கு பரிணாமத்திற்கும், முழுமையான மனிதப் பரிணாமத்திற்கும் இடையில் லூசியின் பரிணாமம் நடப்பதைப் போன்ற டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள். இதன் மூலம் குரங்கிலிருந்து எப்படி மனித வளர்ச்சி ஏற்பட்டது என்பதையும் விளக்கியுள்ளது கூகுள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts