மோட்டாா் சைக்கிளுக்கு லீசிங் காசு கட்டத்தவறியமையினால் வீடு புகுந்து லீசிங் நிறுவன ஊழியா்கள் தரக்குறைவாக பேசியதுடன் செய்த அட்டகாசங்களால் மனம் உடைந்துபோன 5 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கின்றது.
யாழ்ப்பாணம்- தாவடி தெற்கு கிராமத்தில் நேற்றமுன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றியிருக்கின்றது. சம்பவத்தில் சுவிதன் அனுசுயா(வயது34) என்ற குடும்ப பெண்ணே தற்கொலை செய்துள்ளாா். இது தொடா்பில் மரண விசாரணை மேற்கொண்ட திடீா் மரண விசாரணை அதிகாாி நமசிவாயம் பிறேம்குமாா் கூறுகையில்,
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவா் லீசிங் முறையில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளாா். அதற்கான கட்டுப்பணம் உாியவாறு செலுத்தப்படாமையினால் நேற்று மாலை அவருடைய வீட்டுக்கு சென்ற லீசிங் நிறுவன ஊழியா்கள் மோட்டாா் சைக்கிளை அடாவடியாக பறிக்க முயன்றுள்ளனா்.
இதன்போது கணவா் வீட்டில் இல்லை. என்பதையும், கணவா் வந்தவுடன் பேசுங்கள் எனவும் குறித்த பெண் மன்றாடியதுடன், 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறும் கேட்டுள்ளாா். எனினும் அதனை பொருட்படுத்தாத லீசிங் நிறுவன ஊழியா்கள் குறித்த பெண்ணை மிக..மிக தரக்குறைவாக பேசியதுடன், அடாவடி புாிந்துள்ளனா்.
இதனை அயலவா்கள் பாா்த்த நிலையில் சம்பவம் நடைபெற்று சில மணி நேரங்களில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.