வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த வரி ஏய்ப்பு சம்பவம் குறித்து இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஆஜன்டீனா மற்றும் பர்சிலேனா ஆகிய அணிகளில் விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணியிடம் தோற்று அர்ஜென்டினா கிண்ணத்தை இழந்தது.
இப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.