லிங்கா படம் நின்றதா? அதிர்ச்சியில் திரையுலகம்!

’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி, அனுஷ்கா நடிக்க, கமர்ஷியல் கிங் கே.எஸ்,ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

linga-rajini

தற்போது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு அருகில் உள்ள அனஜ்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது.

அங்குள்ள ஒரு ஏரியில் சில கெமிக்கல்களை படக்குழுவினர் கலந்ததால் அவர்களுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியுற்ற படக்குழுவினர் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தினர்.

இதனால் படப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது, நீண்ட நேரத்திற்கு பிறகு ரஜினி, மக்கள் உணர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவரும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதை தொடர்ந்து படக்குழுவினர் கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Posts