லிங்காவில் ரஜினி அசத்திய காட்சி – ராதாரவி வியப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் ஒரு காட்சியில் ராதாரவியை வியக்கும் படி ரஜினிகாந்த் அசத்திய ஒரு சம்பவம் நடந்ததாம். அதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

linga_radharavi002

அவர் கூறுகையில், ஒரு பெரிய ‘டேம்’ மீது ஏறி ரஜினி வசனம் பேச வேண்டும். அந்த காட்சியில் அவர் பேசும்போது அவர் கூட நான் மட்டுமே இருக்க வேண்டும்.
அதனால் ரவிக்குமார் என்னையும் ரஜினியையும் ‘டேம்’ மீது ஏற சொல்லிவிட்டார்.

நான் கூட வருவதை கவனிக்காமல் ரஜினிகாந்த் விறு விறு என படிக்கட்டில் அவரது ஸ்பீடில் ஏறி “நான் ரெடி” என்று சொல்லி விட்டார்.

அவர் கூட ஏறத்தொடங்கிய நானோ பாதி படியைக்கூட தாண்டவில்லை.
இதே போல் ஒரு அனுபவம் 20 வருடத்திற்க்கு முன்பு உழைப்பாளி படத்திலும் எனக்கு ஏற்பட்டது. அதே ரஜினியை தான் நான் லிங்காவிலும் பார்க்கிறேன். ரஜினி என்னை விட வயதில் பெரியவர் என்றாலும் அவர் வேகத்திற்க்கும் சுறுசுறுப்பிற்க்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.

நான் இதுவரை 296 படங்களில் நடித்துள்ளேன். லிங்கா தான் என்னுடைய திரை வாழ்க்கையின் மைல் கல்லாக இருக்கும் என்றார் நடிகர் ராதாரவி.

Related Posts