லிங்காவில் ரஜினியுடன் மோதும் புதிய வில்லன்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்காவின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது.

ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதி, ரஹ்மான் இசை.

lingaa-rajini

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபுவை ஒப்பந்தம் செய்தனர். அவர் படத்தில் நடிக்கிறார். அத்துடன் பிரபல நடிகர் தேவ் சிங் கில்லையும் ஒப்பந்தம் செய்துள்ளார் ரவிக்குமார். இவரும் வில்லனாகவே நடிக்க உள்ளார்.

லிங்கா படத்தின் கதை நிகழ்காலத்திலும், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் வரும் ரஜினிக்கு ஜோ‌டி அனுஷ்கா, சரித்திரகால ரஜினிக்கு சோனாக்ஷி சின்கா. தேவ் சிங் கில் சரித்திரகால ரஜினியுடன் மோதுகிறார்.

லிங்காவில் ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்களுடன் ரஜினி மோதுகிறார். ஹைதராபாத் ஃபிலிம்சிட்டில் சண்டைக் காட்சிகாக பிரமாண்ட அரங்கு அமைக்கப்படுகிறது. அதில் ரஜினி எதிரிகளுடன் மோத உள்ளார். குறிப்பாக ஓடும் ரயிலில் ரஜினி எதிரிகளை துவசம் செய்யும் காட்சியை இந்திய சினிமா இதுவரை பார்த்திராத வகையில் எடுக்க உள்ளார்களாம். ரஜினி டூப் போடாமலே அதில் நடிக்க உள்ளாராம்.

Related Posts