லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ட்ரைலர் வெளியீடு

தனது நடிப்பில் உருவாகி வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் மிகவும் பிரபலமாக, படத்திற்கு தலைப்பாகவே வைத்து விட்டனர்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, அறிமுக இயக்குநர் சாய் ரமணி படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நேற்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாக்கி இருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, வருகின்ற மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related Posts