லாரன்சுடன் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு நடித்திருக்கும் படம் `சிவலிங்கா’. கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், `சிவலிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமன் இசையில் `சிவலிங்கா’ படத்தின் பாடல்கள் பொங்கல் ட்ரீட்டாக நேற்று வெளியானது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன் பிரபு, சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், சிவலிங்கா படத்தின் `ரங்கு ரக்கரா’ பாடலுக்கு லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் செமையான குத்தாட்டம் போட்டனர். இதன்பின்னர் பேசிய லாரன்ஸ், சிவகார்த்தியன் நடித்து வரும் புதிய படத்தில், ஒரு பாடலை அவர் வடிவமைப்பதாக தெரிவித்தார்.

Related Posts