லப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் கொழும்பு விலை ஆயிரத்து 856 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 743 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கு அதன் விலை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts