லண்டன் விமான நிலையத்தில் ஒன்றுடனொன்று மோதிய விமானங்கள்

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் இரு ரேயனெயார் பயணிகள் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் விமானமொன்றின் இறக்கையும் மற்றைய விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்துள்ளன.

plane-london

plane-london-2
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி விமான விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

போலந்தின் வார்ஸா விமான நிலையத்திலிருந்து வந்த விமானமும் ஜேர்மனிய பிராங்பூர்ட்ஹாஹ்ன் விமான நிலையத்திலிருந்து வந்த விமானமுமே இவ்வாறு விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் விமானங்களை நிறுத்துவதற்கான பகுதியில் மோதிக் கொண்டன.

இந்த விமான அனர்த்தத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை.

மேற்படி, விமானங்களில் பயணித்த பயணிகள் 3 மணி நேர கால தாமதத்தையடுத்து வேறு விமானங்களில் தமது பயணத்தை தொடர்ந்தனர்.

Related Posts