லண்டன் பிரிட்ஜ், பரோ தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது

லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெரு நகர காவற்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பெரு நகர காவற்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளைப் பிரிவினர், பாக்கிங் பகுதியில் நடத்திய விசேட தேடுதலின் போது, தாக்குதல் தாரிகளுடன் தொடர்பில் இருந்ததான சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர் இந்த மாடிக் குடியெிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாக அயலில் உள்ளவர்கள் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Related Posts