லண்டனுக்கான இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கம்!

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர் தமிழர்களால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அந்த தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார்.

குறித்த சம்பவம், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பல அழுத்தங்களை கொடுத்திருந்தது. இந்த நிலையில், தற்போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணையத்தளம் முடக்கப்பட்டுள்ள விடயத்தை பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related Posts