லண்டனிலிருந்து திரும்பிய பெண் கிளிநொச்சியில் சடலமாக கண்டெடுப்பு!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts