வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் அசௌகரிய நிலைமை ஏற்பட்டமை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்காவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்ற அதேவேளை, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 தொடரில் இவர் விளையாட எதிர்பார்த்திருந்த நிலைமையில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலைமை காரணமாக அவர் விளையாடுவது நிச்சயமற்றது என இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஒருவரான அனூஷ சமரநாயக தெரிவித்துள்ளார்.