அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் த சில்வா , பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா , ஒழுக்காற்று குழு தலைவர் அசேல ரூகவ உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிர்வாக சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலிங்கவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல காரணங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கட் மத்திய செயற் குழு இன்று கூடவுள்ளது.