லசித் மாலிங்கவிற்கு பதிலாக திஸர பெரேரா

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு, நியுசிலாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவரின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போது இவருக்கு இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.

இந்த உபாதை இதுவரை குணமடையவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக திஸர பெரேரா அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related Posts