லசித் மலிங்காவிற்கு தண்டத்துடன் கடும் எச்சரிக்கை!

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டிய ஊடக விதிமுறையைக் மீறி மலிங்க கருத்து வெளியிட்ட காரணத்தால்,மலிங்க மீது விசாரணைகள் மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று மாலை அந்த குழுவினர் ஆராய்ந்து மலிங்கவுக்கு இருந்த இந்த சிக்கலை தண்டத்துடன் முடித்து வவைத்துள்ளனர்.

மலிங்கவிற்கு அடுத்து வரவுள்ள சிம்பாவே அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் சம்பளத்திலிருந்து 50 சதவீதம்அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஒரு வருட காலபகுதியில் இவ்வாறான கருத்து பிணக்குகளில் ஈடுபட்டால் 6 மாதங்கள் கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் மலிங்கவிற்கு எச்சரிக்கை பிறப்பிக்கபட்டுள்ளது.

முன்னதாக,வீரர்களின் உடல்தகுதி தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் , உடல்தகுதி எட்டாத வீரர்கள் போட்டிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அண்மையில் விளையாட்டுத்துறை மைச்சர் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக குரங்குக்கு கிளியின் கூட்டைப் பற்றி என்ன தெரியும்எனும்விதமாக மலிங்க ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த நிலையிலேயே மலிங்க விசாரணைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts