ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்கும் படி, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இரு சந்தேகநபர்களின் உருவம் குற்றப் பதிவு பிரிவினரால் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் தொடர்பில் சரியான தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
071 – 8591753
071 – 8591770
077 – 3291500
பட விளக்கம்
படம் ஒன்று – 35 வயது மதிக்கத்தக்க சுமார் 5 அடி 8 அங்குலம் உயரமுடைவர்,
படம் இரண்டு – 40 வயது மதிக்கத்தக்க சுமார் 5 அடி 10 அங்குலம் உயரமுடைய, பருமனானவர்