புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலமையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கு சர்வதேச நாடுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
சிறந்த அரச நிர்வாகம் மற்றும் சிறந்த வெளிநாட்டு கொள்கையுமே இதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
ஜேர்மனி அரசாங்கத்தினால் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யமாறு இந்த நாட்டு அரச தலைவர் ஒருவருக்கு 43 ஆண்டுகளின் பின்னர்,முதற்தடவையாக உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார்.