றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலைக்கு பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள குறித்த களஞ்சியசாலையானது, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கடந்த திங்கட்கிழமை சோதனைக்குட்படுத்தியதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தெரிவித்தார்.
இந்த ஆயுதகளஞ்சியசாலையிலுள்ள ஆயுதங்கள் தேர்தல் வன்முறைகளுக்கு பயன்படுத்தப்படுமென ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில அமைப்புகள் முறைப்பாடு செய்ததையடுத்தே,இந்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரித்தார்.