ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாரா மணிரத்னம்…?

காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் ரோஜா. இப்படம் பல விருதுகளை வாங்கி இந்திய அளவில் புகழ் பெற்றது.

இந்த படத்தில் கண்கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம்.

இவர் தற்போது கார்த்தி, சாய்பல்லவியை வைத்து இயக்கபோகும் படமும் ஒரு தீவிரவாதிகளை மையமாக கொண்டது தானாம்.மேலும் ரோஜா முலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திலும் தனது மேஜிக் இசையை அள்ளித்தர தயாராக இருக்கின்றாராம்.

Related Posts