ரொமான்ஸ் பண்ணாதீர்கள்! யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

jaffna_univer_poster_no-romance

மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேற்படி மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.

இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

Related Posts