ரெமோ மேக்கிங் பர்ஸ்ட் லுக் டீசர் நேற்று இரவு வெளியானது!

சிவகார்த்திகேயன்- அனிருத் கூட்டணி என்றாலே அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டுதான் என்றாகி விட்டது. எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை ஆகிய படங்களின் ஹிட்டுக்குப்பிறகு தற்போது ரெமோ படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

remoo

மேலும் அஜீத்தின் வேதாளம் படத்திற்கு பிறகு பீப் பாடல் சர்ச்சை காரணமாக அனிருத்தின் மார்க்கெட் சற்றே ஆட்டம் கண்டது. என்றாலும், அதை நீடிக்க விடக் கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அனிருத்.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பாடல் வெளியிடு என ஒவ்வொன்றையும் இணையதளங்களில் பரபரப்பாக வெளியிட வேண்டும் என்று திடடமிட்டுள்ள சிவகார்த்திகேயன்-அனிருத் ஆகிய இருவரும் நேற்று இரவு மேக்கிங் ஆப் ரெமோ வீடியோ -ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1-ந்தேதி சிங்கப்பூரில் நடக்கும் சைமா விருது விழாவில் செஞ்சிட்டாளே -என்ற சிங்கில் பாடலை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு டீசர், டிரைலர், பாடல்கள் வெளியீடு என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரெமோவிற்கு பரபரப்பு கூட்டுகிறார்களாம்.

Related Posts