‘ரெமோ’ படத்தில் இளைஞர்-வயதானவர்-பெண் வேடங்களில், சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். இதுபற்றி அந்த படத்தை டைரக்டு செய்யும் பாக்யராஜ் கண்ணன் கூறியதாவது:-

sivakarthikeyan

“ஒரு பெண் மீது ஒரு இளைஞர் காதல்வசப்பட்டு, அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன ஆகிறது? என்பதே ‘ரெமோ’ படத்தின் கதை. கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் இளைஞராக, வயதானவராக, பெண்ணாக மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். படத்தில் கே.எஸ்.ரவி குமார், ‘ஆடுகளம்’ நரேன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சாமிநாதன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

காதலும், நகைச்சுவையும் கலந்த கதை. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் படம் வளர்ந்து வருகிறது. 2 பாடல் காட்சிகளை தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. செப்டம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தி வெளியீடாக படம் திரைக்கு வரும்.”

Related Posts