‘ரெமோ’ – ஆன சிவகார்த்திகேயன்

ரஜினி முருகனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

siva-remo

இதுவரை நடித்ததில் இருந்து மாறுபட்டு இந்த படத்தில் சில வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். அதனால் அந்த படத்திற்கு இதுவரை டைட்டீல் வைக்காதபோதும் நர்ஸ் அக்கா என்று குறிப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார் சிவகார்த்திகேயன். அப்போது தனது புதிய படத்திற்கு ரெமோ என்று டைட்டீல் வைத்திருப்பதாக நேற்று மாலையில் அறிவித்தார்.

ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த அந்நியன் படத்தில் ரெமோ என்றொரு ப்ளேபாய் கேரக்டரில் நடித்திருந்தார் விக்ரம். அந்த பெயரைத்தான் இப்போது சிவகார்த்திகேயன் படத்துக்கு டைட்டீலாக வைத்துள்ளனர். அதனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ப்ளேபாய் வேடத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது.

Related Posts