“ரெமோ’சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

ரெமோ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கும் ,​ ரெமோ படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பி.சி. ஸ்ரீராம், இசை – அனிருத். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்று கிடைத்து வசூலில் சாதனை படைத்தது.

ரெமோ படத்தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ரஜினியின் பாராட்டு குறித்து டுவிட்டரில் பதிவில் :” ரெமோ படம் பார்த்தபிறகு ரஜினி எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் போன் செய்து பாராட்டினார். அவருக்கு ரெமோ படம் மிகவும் பிடித்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகனான எனக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம் ” என்று டுவீட் செய்துள்ளார்.

Related Posts