ரெட்டி இல்ல திருமண விழாவில் நடனமாடிய பிரபல தமிழ் நடிகைகள்

சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவ‌ம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற ரூ.2 கோடி செலவில் திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு வைக்கும் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சடங்கில் நடனமாடுவதற்காக 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

Related Posts