ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி சிவனேஷ்வரன் ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் பிரதான சாட்சிகளாக ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும்​ ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts