இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தவிர, தன் மீதான தாக்குதலுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 5 கோடி ரூபாய் அபராதம் கேட்டு, இன்று முறைப்பாடொன்றையும் செய்யவுள்ளதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி