சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்.
இந்த போலி ஒப்பந்ததத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியே, அவர் இந்த கோரிக்கைப் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளார்.