ரூட்டை மாற்றுகிறார் பரத்!

காதல் படத்திற்கு பிறகு வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்த பரத்திற்கு, ஒருகட்டத்தில் தொடர்ந்து வீழ்ச்சியாக அமைந்தது. அதனால் தற்போது அவர் தனது ரூட்டையும் மாற்றி மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

அதன்காரணமாக, என்னோடு விளையாடு படத்தில் குதிரை ரேஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் நடித் திருக்கும் அவர், அதற்கடுத்து பொட்டு, கடுகு படங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் அவரது கெட்டப்கூட வித்தியாசமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

மேலும், அதையடுத்து நடித்துள்ள சதுரங்கவேட்டை-2 படத்தில் இதுவரை நடிக்காத ஒரு சைக்கோ வேடத்தில் நடித்துள்ளார் பரத்.

இந்த வேடம் பரத்தின் கேரியரில் மிக முக்கியமானதாக இருக்குமாம். அதோடு, பரத்தை இந்த மாதிரியொரு கெட்டப்பில் பார்ப்பது ரசிகர்களுக்கு மிக புதுமையான அனுபவமாக இருக்குமாம். அந்த அளவுக்கு தனது பர்பாமென்ஸை வித்தியாசப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கிறாராம் பரத். அதுமட்டுமின்றி, இந்த வேடத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருக்கும் பரத், அந்த கேரக்டரில் நடிக்கும்போது ஸ்பாட்டில் யாரிடமும் அரட்டையில் ஈடுபடாமல், அந்த கதாபாத்திரமாகவே மாறியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.

Related Posts