மே 18 நினைவேந்தல் நிகழ்வானது இன்று திருகோணமலை நகரின் கடற்கரையில் அமைந்திருக்கும் காந்திசிலைக்கு முன்னாள் மதியம் 1.45க்கு வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தீபம் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கு பதிலளித்தார்.
ஏழு மாத குழந்தை உட்பட குமுதினி படுகொலை, திருகோணமலையில் இதே காந்தி சிலைக்கு முன்பாக ஐந்து மாணவர்கள் படு கொலை செய்யப்பட்டமை, மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை உட்பட இதைசெய்தவர்களை நினைத்தே அவர் மனவருத்தப்பட வேண்டும் என்றார்.
அத்துடன், கொலை செய்தவர்களை தண்டிப்பதை விட்டுவிட்டு என்னை விமர்சிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.