ரீமேக் ஆகிறது ரஜினியின் மூன்று முகம்: தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தினார்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய படம் மூன்று முகம். ராதிகா, ராஜலட்சுமி, ஹீரோயின்களாக நடித்திருந்தார்கள். செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.

Moondru Mugam

1982ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்றும், அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன. இப்போது அதனை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உறுதிப்படுத்தி உள்ளார். தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி, சமீபத்தில் வெளிவந்த ஜிகிர்தண்டா படங்களை தயாரித்தவர்.

மூன்று முகம் ரீமேக் பற்றி தயாரிப்பாளர் கதிரேசன் கூறியதாவது: மூன்று முகம் படத்தை ரீமேக் செய்ய சத்யா மூவிசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளேன். அதனை இயக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது.

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கிறேன். அது மூன்று முகம் ரீமேக்கா இல்லை, வேறு கதையா என்பதை அவர் முடிவு செய்வார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் நடிக்க வைத்தார். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிக்கவும் செய்வேன் என்கிறார் கதிரேசன்.

மூன்று முகம் ரீமேக்கில் தனுஷ், விஜய் அல்லது கார்த்தி மூவரில் ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள்.

Related Posts