ரிச்சி பெனாட் மறைவு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் இன்று காலமானார்.

richie-benaud

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டியில் 2000 ரன் எடுத்து, 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் இவராவார். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 28 தொடர்களை சந்தித்துள்ளது. இதில் ஒரு தொடரைக்கூட ஆஸ்திரேலியா இழந்ததில்லை. ரெபிலியஸ் உலக கிரிக்கெட் தொடர் 1970-ல் ஆரம்பிக்க முக்கிய பங்கு வகித்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் கடந்த 2013 ஆம் ஆண்டு பி.பி.சி. மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியாக்களுக்கு வர்ணனையாளராக செயல்பட்டார்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட ரிச்சி பெனாட் தனது 83 வயதில் காலமானார்.

Related Posts